» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுகவின் மக்கள் நலத் திட்டங்களைப் புதிய அரசு தொடர வேண்டும்: மு.க. ஸ்டாலின் விருப்பம்!
ஞாயிறு 10, மே 2026 11:13:16 AM (IST)
தமிழகத்தில் புதிய ஆட்சி அமையவுள்ள சூழலில், கடந்த ஐந்தாண்டு காலத் திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் முழுப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய ஆட்சி அமைவதற்குத் திமுக தடையாக இருக்காது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாறாக, மக்கள் நலன் கருதி சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகத் திமுக செயல்படும் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்: மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான நலத்திட்டங்கள் போன்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய திட்டங்களைப் புதிய அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு தனிமனிதனும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டங்களைத் தொடர்வதன் மூலமே மாநிலம் தொடர்ந்து வளரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக அரசின் 10 லட்சம் கோடி கடன் குறித்து வெள்ளை அறிக்கை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
ஞாயிறு 10, மே 2026 11:28:51 AM (IST)

ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் விஜய் முதல் கையொப்பம்!
ஞாயிறு 10, மே 2026 11:22:04 AM (IST)

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார் விஜய்: நேரு உள்விளையாட்டரங்கில் கோலாகலம்!
ஞாயிறு 10, மே 2026 11:15:05 AM (IST)

தூத்துக்குடியில் தடைக்காலத்தால் எகிறும் மீன் விலை : பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர்!!
ஞாயிறு 10, மே 2026 9:55:39 AM (IST)

நாளை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார் விஜய்: 9 அமைச்சர்களும் பதவியேற்பு!
சனி 9, மே 2026 7:56:19 PM (IST)

தமிழகத்தின் புதிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து; ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட உறுதி!
சனி 9, மே 2026 5:40:29 PM (IST)


