» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு: குற்றங்களைத் தடுக்க உறுதி!
புதன் 3, ஜூன் 2026 3:11:35 PM (IST)

தமிழகக் காவல் துறையின் புதிய தலைமை இயக்குநராக மகேஷ்குமார் அகர்வால் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் சைபர் குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்த அனைத்து விதமான அதிரடி நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுள்ள மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
தமிழக டி.ஜி.பி.யாகப் பணிபுரிந்து வந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து, பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழகச் சட்டசபைத் தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தால் டி.ஜி.பி.யாகச் சந்தீப்ராய் ரத்தோட் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அண்மையில் புது டெல்லியில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) நடத்திய உயர்மட்டக் கூட்டத்தில், தகுதிவாய்ந்த அதிகாரிகளின் பட்டியலிலிருந்து மகேஷ்குமார் அகர்வால் புதிய டி.ஜி.பி.யாக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள 54 வயதான மகேஷ்குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 1994-ஆம் ஆண்டு, தனது 22-வது வயதில் தமிழகப் பிரிவு (Tamil Nadu Cadre) ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வாகித் தனது காவல் பணியைத் தொடங்கினார். சுமார் 10 ஆண்டுகள் மத்திய புலனாய்வு அமைப்பில் (CBI) முக்கிய அதிகாரியாகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். மேலும், கடந்த 2021-ஆம் ஆண்டில் சென்னை மாநகரக் காவல் ஆணையராகவும் (COP) சிறப்பான உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத் திறனுடன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சருக்கு நன்றி மற்றும் புதிய இலக்குகள்:
தமிழகக் காவல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய தெரிவித்ததாவது: "தமிழக மக்களுக்குச் முழுமையாகச் சேவை செய்ய எனக்குப் பெரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகளுக்குத் தமிழகப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
என்னை டி.ஜி.பி.யாக நியமித்த தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் சைபர் குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்த அனைத்து விதமான அதிரடி நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும்." என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படப்பிடிப்பில் தீவிபத்து: தொழில்நுட்ப வல்லுநர் பலி! – இருவர் கைது!
புதன் 3, ஜூன் 2026 5:33:18 PM (IST)

தவெக கூட்டணியில் காங்கிரசுக்கு மாநிலங்களவை எம்பி சீட்: முதல்வர் விஜய் அறிவிப்பு!
புதன் 3, ஜூன் 2026 5:03:40 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

விபத்தில் இறந்த சிங்கப்பூர் இன்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.1.33 கோடி இழப்பீடு: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:37:51 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தங்களுக்கு கமிஷனா? – சங்கப் பொருளாளர் மறுப்பு - முதல்வருக்கு கடிதம்!
புதன் 3, ஜூன் 2026 11:14:48 AM (IST)


