» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு மருத்துவமனைகளில் குறைகளைக் களைய 50 அதிகாரிகள் நியமனம்: சுகாதாரத்துறை அதிரடி!
சனி 11, ஜூலை 2026 12:06:38 PM (IST)
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவி வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைச் சரி செய்யத் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ உள்கட்டமைப்பு, சுகாதாரம், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையைச் சரி செய்தல், அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துவது அவசியம் என அரசு அறிவுறுத்தியிருந்தது. இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 50 தொடர்பு அதிகாரிகளை நியமிக்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (DME) முறைப்படி உத்தரவிட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளில் வரும் புகார்களுக்கு உடனடித் தீர்வு காணும் வகையில் இப் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அந்தந்த அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ நிலைய அதிகாரி (RMO) அல்லது மருத்துவக் கண்காணிப்பாளர் ஆகியோரில் ஒருவர் தொடர்பு அதிகாரியாகச் செயல்படுவார். இவர்களின் கீழ் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் பணியாற்றுவார்கள்.
இவ்வதிகாரிகளை மாநில அளவில் ஒருங்கிணைக்கும் முக்கியப் பொறுப்பிற்குப் பேராசிரியர் சுதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்காக, மருத்துவக் கல்வி இயக்குனரக அலுவலகத்தில் 'தொடர்பு அதிகாரி பிரிவு' என்ற புதிய பிரிவு தனியாகத் தொடங்கப்பட உள்ளது. மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து, சீரமைக்கப்பட்ட பணிகளைத் தொடர் அறிக்கையாகச் சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கனிமொழி எம்.பி. வாகனம் தடுத்து நிறுத்தம்; 1 கி.மீ நடந்து சென்று அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை!
சனி 11, ஜூலை 2026 12:55:07 PM (IST)

கிராமப்புற விளையாட்டு வீரர்களை உருவாக்க நடவடிக்கை: மினி மைதானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு!
சனி 11, ஜூலை 2026 12:44:31 PM (IST)

திருச்செந்தூர் கோவில் யானைக்கு மருத்துவப் பரிசோதனை: பக்தர்கள் உணவு வழங்கத் தடை!
சனி 11, ஜூலை 2026 11:50:36 AM (IST)

மின்னணு கழிவுகளை சேகரிக்கப் புதிய திட்டம்: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
சனி 11, ஜூலை 2026 10:13:15 AM (IST)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.17 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
சனி 11, ஜூலை 2026 8:49:28 AM (IST)

ஆர்டிஐ: உரிய காலத்தில் தகவல் தராத மாநகராட்சி அலுவலருக்கு 10,000 ரூபாய் அபராதம்!
சனி 11, ஜூலை 2026 8:41:28 AM (IST)


