» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தடியடி நடத்தினால் நாடு தோற்றதாக அர்த்தம்: கமல்ஹாசன் காட்டம்!
வியாழன் 23, ஜூலை 2026 12:30:04 PM (IST)
இளைஞர்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தடைகளையும் தடியடிகளையும் மட்டுமே அரசு பரிசளித்தால், அந்த நாடு தோல்வியடைந்ததாகவே அர்த்தம்" என நீட் விவகாரத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லியில் பல்வேறு அமைப்பினரும் ஏராளமான இளைஞர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டங்களுக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், "ஒரு குழந்தை அழுதபோதே நாம் அதைக் கவனித்திருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக நம் குழந்தைகள் பலர் உயிரிழக்கும் வரை நாம் காத்திருந்துவிட்டோம். கற்றலுக்குப் பதிலாகப் பயிற்சி வகுப்புகளும் (Coaching), ஆர்வத்திற்குப் பதிலாகப் பதற்றமும், தகுதிக்கு (Merit) பதிலாகக் குற்றச் செயல்களும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கல்வி அமைப்பு முற்றிலும் சீரழிந்த ஒன்றாகும். இளைஞர்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதில்கள் கிடைப்பதற்குப் பதிலாக, தடைகளும் தடியடிகளும் மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கும்போது, அந்த நாடு தோல்வியடைந்ததாகவே அர்த்தம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இந்தியக் குழந்தைகளே, நீங்களே நம்மில் மிகச் சிறந்தவர்கள். உங்களுடைய கடமையை நீங்கள் செவ்வனே செய்துவிட்டீர்கள். இனி, உங்களுக்கான கடமையைச் செய்ய வேண்டியது இந்த நாட்டின் பொறுப்பு. எனவே, உங்கள் கனவுகள் எப்போதும் பெரிதாக இருக்கட்டும்" என்றும் கமல்ஹாசன் எம்.பி. தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொல்காப்பியம் முழுவதையும் 22 மணி நேரத்தில் எழுதி உலக சாதனை: மாணவிக்கு த.வெ.க பாராட்டு
வியாழன் 23, ஜூலை 2026 10:13:09 AM (IST)

கல்குவாரி சேதங்கள் சீரமைக்கப்பட்டதா? ஆட்சியர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 23, ஜூலை 2026 8:53:07 AM (IST)

தூத்துக்குடி கப்பல்கட்டும் தளத்துக்கான இடம் தேர்வு : உப்பள உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி
வியாழன் 23, ஜூலை 2026 8:05:36 AM (IST)

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் - தமிழக அரசு உத்தரவு!
புதன் 22, ஜூலை 2026 5:44:54 PM (IST)

அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!
புதன் 22, ஜூலை 2026 5:04:58 PM (IST)

அங்கன்வாடி முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு : டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!
புதன் 22, ஜூலை 2026 4:42:01 PM (IST)


