» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒலிம்பிக் ஹாக்கி: 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா!

சனி 3, ஆகஸ்ட் 2024 12:39:08 PM (IST)



பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

ஆடவா் ஹாக்கி குரூப் சுற்றில், இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் 3-2 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. ஒலிம்பிக் ஹாக்கியில் கடந்த 52 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். இதற்குமுன் 1972 மியுனிக் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அந்த அணியை வென்றிருந்தது. ஏற்கெனவே காலிறுதிக்கு தகுதிபெற்றுவிட்ட இந்தியா, குரூப் சுற்று ஆட்டங்களை 3 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் 2-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்திருக்கிறது.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் இந்தியாவுக்காக அபிஷேக் 12-ஆவது நிமிஷத்தில் கோலடித்து கணக்கை தொடங்கினாா். அடுத்த நிமிஷமே கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் கோலடித்து முன்னிலையை 2-0 என அதிகரித்தாா். இந்நிலையில் தாமஸ் கிரெய்க் 25-ஆவது நிமிஷத்தில் ஆஸ்திரேலியாவின் கணக்கை தொடங்கினாா். இதனால் முதல் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் 32-ஆவது நிமிஷத்திலேயே ஹா்மன்பிரீத் சிங் மேலும் ஒரு கோலடித்து முன்னிலையை 3-1 என அதிகரித்தாா். 

இந்தியா அதை இறுதிவரை தக்கவைத்த நிலையில், 55-ஆவது நிமிஷத்தில் ஆஸ்திரேலியாவின் பிளேக் கோவா்ஸ் கோலடிக்க, அந்த அணி 2-3 என நெருங்கியது. எனினும், எஞ்சிய நேரத்தில் இந்தியா மேலும் கோல் வாய்ப்பு கொடுக்காமல் 3-2 என வெற்றியை உறுதி செய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory