» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாரா ஒலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்

வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 4:33:52 PM (IST)

பாரீசில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி இரு பதக்கங்களைப் பெற்றது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் போட்டியிட்ட அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தினர்.

பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் அவனி லெகரா தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்தியாவின் மோனா அகர்வால் வெண்கலம் வென்றார்.

இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தனது பதக்க கனவை தொடங்கி உள்ளது. ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என 2 பதக்கங்களைப் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

துலிப் கோப்பை: இந்தியா ஏ அணி சாம்பியன்!

திங்கள் 23, செப்டம்பர் 2024 10:59:45 AM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory