» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நாக்-அவுட் சுற்றில் இமாலய இலக்கை விரட்டி: இந்திய மகளிர் அணி உலக சாதனை!

வெள்ளி 31, அக்டோபர் 2025 11:27:56 AM (IST)



மும்பை டி.ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன் இலக்கை இந்திய அணி 48.3 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 341 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன் எடுத்தார்.

இந்திய அணி உலகக் கோப்பையில் இதற்கு முன்பு 200 ரன்களுக்கு மேலான இலக்கை கூட சேசிங் செய்ததில்லை. இப்போது 339 ரன்களை செமஜோராக எட்டிப்பிடித்து இருக்கிறது. ஆண்கள் மற்றும் மகளிர் ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையை எடுத்துக் கொண்டால், நாக்-அவுட் சுற்றில் இதற்கு முன்பு எந்த அணியும் 300 ரன்களுக்கு மேலான இலக்கை விரட்டிப்பிடித்ததில்லை.

ஆண்கள் உலகக் கோப்பையில் 2015-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரைஇறுதியில் நியூசிலாந்து அணி 298 ரன் இலக்கை எட்டியதே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது. அவற்றை எல்லாம் தகர்த்து இப்போது இந்தியா அச்சாதனையை தன்வசப்படுத்தி இருக்கிறது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 134 பந்துகளில் 127 ரன்களையும், ஹர்மன்பிரீத் கவுர் 89 ரன்களையும் சேர்த்து முக்கியக் கூட்டணி அமைத்ததால் இந்த அசாத்திய வெற்றி சாத்தியமானது.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிகபட்ச சேசிங் ஆன 338 ரன்களை விரட்டி இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் என்று அபாரமாக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பை தொடர் 16 வெற்றிகளை முடிவுக்குக் கொண்டு வந்து தோல்விமுகத்தை காட்டியது இந்திய மகளிர் படை. முதன் முதலாக ஆஸ்திரேலியாவோ இங்கிலாந்தோ இல்லாத இறுதிப் போட்டி வரும் ஞாயிறன்று இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory