» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: கால்இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா தோல்வி!

ஞாயிறு 9, நவம்பர் 2025 8:31:20 AM (IST)



ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட் தொடரில் குவைத் அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணி கால்இறுதி வாய்ப்பை இழந்தது.

ஹாங்காங் சிக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டி அங்குள்ள மோங்காக் நகரில் நடந்து வருகிறது. 6 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் ஒரு அணியில் 6 வீரர்கள் இடம் பெறுவார்கள். இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த நிலையில் நேற்று நடந்த 2-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்தை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த குவைத் அணி 6 ஓவர்களில் 106 ரன்கள் குவித்தது. கேப்டன் யாசின் பட்டேல் 58 ரன்கள் (14 பந்து, 2 பவுண்டரி, 8 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்திய அணி தரப்பில் அபிமன்யு மிதுன் 2 விக்கெட் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி 5.4 ஓவர்களில் 79 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் குவைத் அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிமன்யு மிதுன் 26 ரன்கள் எடுத்தார். ராபின் உத்தப்பா (0), கேப்டன் தினேஷ் கார்த்திக் (8 ரன்) உள்ளிட்ட மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர். குவைத் அணியின் கேப்டன் யாசின் பட்டேல் 3 விக்கெட் கைப்பற்றினார்.

லீக் சுற்று முடிவில் ‘சி’ பிரிவில் குவைத், பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் 2 ஆட்டங்களில் ஆடி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் எடுத்து சமநிலை வகித்தன. ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் முறையே முதல் இரு இடங்களை பிடித்த குவைத், பாகிஸ்தான் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின. 3-வது இடம் பெற்ற இந்திய அணி கால்இறுதி வாய்ப்பை இழந்தது ‘பவுல் லீக்’ சுற்றுக்கு தரம் இறங்கியது. பவுல் லீக் சுற்றில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திடமும், 92 ரன் வித்தியாசத்தில் நேபாளத்திடமும் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory