» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சையத் முஷ்டாக் அலி கோப்பை: சாய் சுதர்சன் அதிரடி சதம்: தமிழக அணி ஆறுதல் வெற்றி!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:35:16 PM (IST)
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் சவுராஷ்டிராவை வீழ்த்தி 3 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி பெற்றது.
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதின. இதன் 7-வது மற்றும் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன.
இதில் ஆமதாபாத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் (டி பிரிவு) தமிழக அணி, சவுராஷ்டிராவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விஷ்வராஜ் ஜடேஜா 70 ரன்களும், சம்மர் கஜ்ஜார் 66 ரன்களும் அடித்தனர். தமிழக அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டும், இசக்கிமுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தமிழக அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் ஆன சாய் சுதர்சன் பொறுப்புடன் ஆடி அணியை கரை சேர்த்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரிதிக் ஈஸ்வரன் 29 ரன்களிலும், சன்னி சந்து 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
18.4 ஓவர்களில் தமிழக அணி 7 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடி சதமடித்த சாய் சுதர்சன் 101 ரன்களுடன் (55 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட தமிழக அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. தமிழக அணி 3 வெற்றி, 4 தோல்வியுடன் தனது பிரிவில் 4-வது இடம் பெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஏ20 கிரிக்கெட் தொடர்: சன்ரைசர்ஸ் 3வது முறையாக சாம்பியன்!
செவ்வாய் 27, ஜனவரி 2026 12:25:18 PM (IST)

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சதம்: மும்பை வீராங்கனை சாதனை!
செவ்வாய் 27, ஜனவரி 2026 12:11:15 PM (IST)

அபிஷேக் சர்மா, சூர்யகுமார் அதிரடி: நியூசி.யை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!
திங்கள் 26, ஜனவரி 2026 11:43:56 AM (IST)

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் வெற்றி: இந்திய அணி சாதனை!
சனி 24, ஜனவரி 2026 11:58:43 AM (IST)

டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர்: வங்கதேசம் விலகல்
வியாழன் 22, ஜனவரி 2026 9:29:07 PM (IST)

அபிஷேக் சர்மா அதிரடி : 44-வது முறையாக 200+ ரன்கள் குவித்து இந்தியா வெற்றி!
வியாழன் 22, ஜனவரி 2026 10:27:37 AM (IST)

