» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சதம்: மும்பை வீராங்கனை சாதனை!

செவ்வாய் 27, ஜனவரி 2026 12:11:15 PM (IST)



பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த ஆல்ரவுண்டர் நாட் ஸ்கைவர்-பிரண்ட், மகளிர் பிரீமியர் லீக்கில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். 

மகளிர் பிரீமியர் லீக் 2026 சீசனில் 16 வது போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், ஆர்சிபி அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ், சஜீவன் சஜனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இதில், சஜனா 07 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மேத்யூஸ் உடன் ஸ்கைவர்-பிரன்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், மேத்யூஸ் 39 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஸ்கைவர்-பிரன்ட் அபாரமாக விளையாடி 57 பந்தில் சதம் அடித்தார். இதன்மூலம் மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

இங்கிலாந்து வீராங்கனையான இவர், 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், முன்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory