» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
யு19 உலகக் கோப்பையில் இந்திய அணி புதிய சாதனை அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 11:47:26 AM (IST)

ஹராரேவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. அந்த அணியில் பைசல் ஷினோசாடா (110) மற்றும் உஜைருல்லா நியாசி (101*) ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். இந்தியாவின் அதிரடி பதிலடி: 311 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணி, வெறும் 41.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட அதிகபட்ச ரன் இலக்காகும்.
இந்திய அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் 115 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். இவருடன் வைபவ் சூர்யவன்ஷி (68) மற்றும் கேப்டன் ஆயுஷ் ம्हाத்ரே (62) ஆகியோர் அரைசதம் அடித்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 10-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
பிப்ரவரி 6, வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
யு19 உலகக் கோப்பையில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்குகள்
311 - இந்தியா - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக (2026)
305 - நியூசிலாந்து - அயர்லாந்துக்கு எதிராக (2006)
294 - தெ.ஆ. - வங்க தேசத்துக்கு எதிராக (2022)
292 - மே.இ.தீ - இலங்கைக்கு எதிராக (2010)
279 - மே.இ.தீ. - அயர்லாந்துக்கு எதிராக (2018)
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் 2026: தொடக்கப் போட்டிகளில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:17:37 PM (IST)

சிஎஸ்கே-வில் சஞ்சு சாம்சன்: 11-ஆம் எண் ஜெர்சியுடன் களமிறங்குகிறார்!
வியாழன் 19, மார்ச் 2026 5:17:25 PM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: பிசிசிஐ விளக்கம்!
சனி 14, மார்ச் 2026 11:10:49 AM (IST)

வாழ்த்துப் பதிவில் சஞ்சு சாம்சன் நீக்கம்: சர்ச்சையில் சிக்கிய ஷுப்மன் கில்!
சனி 14, மார்ச் 2026 10:29:35 AM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு!
வெள்ளி 13, மார்ச் 2026 12:28:11 PM (IST)

ஐபிஎல் 2026: மார்ச் 12-ல் முதற்கட்ட அட்டவணை வெளியீடு!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:18:07 PM (IST)

