» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தோனி இல்லாத சிஎஸ்கே தடுமாற்றம்: வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியில் ராஜஸ்தான் அபார வெற்றி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:41:28 AM (IST)

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ராஜஸ்தான் அணியில் இருந்து சிஎஸ்கேவுக்கு டிரேடிங் செய்யப்பட்ட நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 6 ரன்களில் நந்த்ரே பர்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (6 ரன்கள்), ஆயுஷ் மாத்ரே (0) என முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.
இம்பாக்ட் பிளேயராக வந்த சர்ஃபராஸ் கான் 17 ரன்களும், ஷிவம் துபே 6 ரன்களும் எடுத்து ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், 8-வது வீரராகக் களமிறங்கிய ஜேமி ஓவர்டன் பொறுப்புடன் விளையாடி 43 ரன்கள் (36 பந்துகள்) சேர்த்தார். இதன் மூலம் சிஎஸ்கே வரலாற்றில் 8-வது வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற தோனியின் சாதனையை (37 ரன்கள்) ஓவர்டன் முறியடித்தார். இறுதியில் சிஎஸ்கே 19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
128 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அவருக்குக் கிடைத்த கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்ட சிஎஸ்கே, அதற்குப் பெரும் விலையைக் கொடுத்தது.
அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி, 15 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்தார். அவர் மொத்தம் 17 பந்துகளில் 52 ரன்கள் (4 பவுண்டரி, 5 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழந்தார். இவருக்கு ஈடுகொடுத்த துருவ் ஜூரெல் 18 ரன்கள் எடுத்தார். இறுதியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (38*) மற்றும் கேப்டன் ரியான் பராக் (14*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சஞ்சு சாம்சன் ஏமாற்றம்: 2020 முதல் தனது முதல் ஆட்டத்தில் அரைசதம் அடித்து வந்த சஞ்சு சாம்சன், இந்த முறை 6 ரன்களில் வெளியேறினார். காயம் காரணமாக தோனி களமிறங்காத நிலையில், அவர் இல்லாமல் சிஎஸ்கே தோல்வியடைவது இது 5-வது முறையாகும்.
குறைந்த ஸ்கோர்: ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே முதலில் பேட் செய்து எடுத்த 3-வது குறைந்த ஸ்கோர் (127) இதுவாகும்.
அதிவேக அரைசதம்: ராஜஸ்தான் அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வாலுக்கு (13 பந்து) அடுத்தபடியாக சூர்யவன்ஷி (15 பந்து) 2-வது இடத்தைப் பிடித்தார். 47 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நடப்புத் தொடரில் தனது முதல் 2 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி : பஞ்சாப் அணியின் பிளே-ஆப் வாய்ப்பில் சிக்கல்!
வெள்ளி 15, மே 2026 3:34:37 PM (IST)

சிஎஸ்கே பிளே-ஆப் செல்லுமா? கணிப்புகளும் - வெற்றி வாய்ப்புகளும்!
வெள்ளி 15, மே 2026 12:34:40 PM (IST)

கோவில்பட்டியில் மாநில ஆக்கிப் போட்டி: சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
வெள்ளி 15, மே 2026 8:32:25 AM (IST)

நெருக்கடியான தருணங்களே என்னைச் செதுக்குகின்றன: விராட் கோலி நெகிழ்ச்சி!
வியாழன் 14, மே 2026 4:58:29 PM (IST)

மாநில சீனியர் ஹாக்கி: நெல்லை, கோவை அணிகள் வெளியேற்றம்!
புதன் 13, மே 2026 8:10:56 AM (IST)

மில்லர் - அக்சர் அதிரடி: பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி!
செவ்வாய் 12, மே 2026 12:22:26 PM (IST)


