» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தோல்வியால் விரக்தி: மைதானத்திலேயே ரிஷப் பண்டை கடிந்து கொண்ட சஞ்சீவ் கோயங்கா!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:08:34 AM (IST)

2026 ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் மிட்செல் மார்ஷ் (35), அப்துல் சமத் (36) ஆகியோர் ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். டெல்லி அணியின் பந்துவீச்சில் லுங்கி என்கிடி மற்றும் நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
142 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, ஒரு கட்டத்தில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், சமீர் ரிஸ்வி (70 ரன்கள்) மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி இணைந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறச் செய்தது.
லக்னோ அணியின் இந்தத் தோல்வியால் மிகுந்த ஆவேசமடைந்த உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ஆட்டம் முடிந்ததும் மைதானத்திலேயே தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஆலோசகர் டாம் மூடி மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோரிடம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார். அவர் கோபமாகச் சைகை காட்டிப் பேசுவது கேமராக்களில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சஞ்சீவ் கோயங்கா இவ்வாறு பொதுவெளியில் வீரர்களையும் கேப்டனையும் விமர்சிப்பது இது முதல் முறையல்ல: 2024 சீசனில் ஹைதராபாத் அணியிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு, அப்போதைய கேப்டன் கே.எல். ராகுலை மைதானத்திலேயே அவர் கடுமையாகச் சாடினார். அந்தச் சர்ச்சையே ராகுல் அணியை விட்டு வெளியேற முக்கியக் காரணமாக அமைந்தது.
2025 சீசனில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த போது பால்கனியில் இருந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, போட்டி முடிந்த பிறகு அவரிடம் விவாதத்தில் ஈடுபட்டார். தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது, கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுநர்களிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. "வீரர்களின் கௌரவத்தைப் பொதுவெளியில் சீண்டுவது ஒரு உரிமையாளருக்கு அழகல்ல" எனப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில அளவிலான கால்பந்து போட்டி: தூத்துக்குடி அணி 3-0 என அபார வெற்றி!
ஞாயிறு 17, மே 2026 9:25:35 AM (IST)

லக்னோவுக்கு எதிராக பந்துவீச்சு வியூகம் பலிக்கவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வேதனை!
சனி 16, மே 2026 4:34:27 PM (IST)

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி : பஞ்சாப் அணியின் பிளே-ஆப் வாய்ப்பில் சிக்கல்!
வெள்ளி 15, மே 2026 3:34:37 PM (IST)

சிஎஸ்கே பிளே-ஆப் செல்லுமா? கணிப்புகளும் - வெற்றி வாய்ப்புகளும்!
வெள்ளி 15, மே 2026 12:34:40 PM (IST)

கோவில்பட்டியில் மாநில ஆக்கிப் போட்டி: சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
வெள்ளி 15, மே 2026 8:32:25 AM (IST)

நெருக்கடியான தருணங்களே என்னைச் செதுக்குகின்றன: விராட் கோலி நெகிழ்ச்சி!
வியாழன் 14, மே 2026 4:58:29 PM (IST)


