» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சாம்சனை இப்போதே எடை போடாதீர்கள்! - சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் ஆதரவு
சனி 4, ஏப்ரல் 2026 11:13:13 AM (IST)
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ள சஞ்சு சாம்சன், தொடக்க ஆட்டங்களில் சொதப்பியது குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்குத் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சிஎஸ்கே-வுக்கு மாறினார் சஞ்சு சாம்சன். ஆனால், முதல் இரண்டு போட்டிகளிலும் முறையே 6 மற்றும் 7 ரன்கள் என மொத்தம் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். முதல் போட்டியில் நாண்ட்ரே பெர்கர் பந்திலும், இரண்டாவது போட்டியில் ஜேவியர் பார்ட்லெட் பந்திலும் அவர் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.சாம்சனின் ஃபார்ம் குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்குப் பதிலளித்த பயிற்சியாளர் பிளெமிங்: இது டி20 கிரிக்கெட்; இதில் ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. வெறும் இரண்டு மோசமான இன்னிங்ஸ்களை வைத்துக்கொண்டு சஞ்சு சாம்சனை யாரும் எடை போட வேண்டாம். அவர் தற்போது நல்ல ஃபார்மில்தான் இருக்கிறார். விரைவில் அவர் ஒரு மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடி அணிக்கு வெற்றியைத் தேடித்தருவார்" என நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 210 ரன்கள் குவித்தும் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக 6-வது தோல்வியைப் பதிவு செய்து சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தோல்விகளில் இருந்து மீண்டு வரத் துடிக்கும் சென்னை அணி, நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியிலாவது சஞ்சு சாம்சன் தனது பழைய அதிரடியைத் திரும்புவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை அணி மீண்டும் கம்பீரமாக வலம் வரும் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!
வெள்ளி 22, மே 2026 5:15:04 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைத்தது ராஜஸ்தான்!
புதன் 20, மே 2026 5:15:00 PM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது ஹைதராபாத்!
செவ்வாய் 19, மே 2026 10:55:16 AM (IST)

டி20 கிரிக்கெட்டில் அதிவேக 3,000 ரன்கள்: சாய் சுதர்ஷன் சாதனை!
திங்கள் 18, மே 2026 4:49:24 PM (IST)

வெங்கடேஷ் ஐயர் அதிரடி: பஞ்சாப்பை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றிற்குள் நுழைந்தது!
திங்கள் 18, மே 2026 12:29:49 PM (IST)

மாநில அளவிலான கால்பந்து போட்டி: தூத்துக்குடி அணி 3-0 என அபார வெற்றி!
ஞாயிறு 17, மே 2026 9:25:35 AM (IST)


