» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சிஎஸ்கே தொடர் தோல்வி: தலைமை மாறுமா? ருதுராஜ் - பிளெமிங் மீது ரசிகர்கள் அருப்தி!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:59:36 PM (IST)

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரிசையாகத் தோல்விகளைத் தழுவி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோரது செயல்பாடுகள் குறித்துச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நேற்றிரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே நிர்ணயித்த 210 ரன்கள் என்ற இமாலய இலக்கைக் கூடக் கட்டுப்படுத்த முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறினர். பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணிலேயே சிஎஸ்கே தோல்வியடைந்தது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் மீது முன்வைக்கப்படும் முக்கியக் குற்றச்சாட்டுகள்: ஏலத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்களைத் தேர்ந்தெடுக்காமல், அனுபவமற்ற பந்துவீச்சாளர்களைக் கொண்டு களம் இறங்கியது பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பந்துவீச்சு சுழற்சி: இக்கட்டான நேரங்களில் யாரைப் பந்துவீச அழைப்பது என்பதில் ருதுராஜ் தடுமாறுகிறார். டி20 உலகக்கோப்பைத் தொடரில் பந்துவீசிய ஷிவம் துபேவுக்கு ஒரு ஓவர் கூட வழங்காதது விவாதப் பொருளாகியுள்ளது.
பயன்படுத்தப்படாத வீரர்கள்: ஜடேஜாவுக்கு மாற்றாக ரூ. 14 கோடிக்கு எடுக்கப்பட்ட பிரசாந்த் வீர், இதுவரை ஒரு பந்து கூட வீசாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
முன்னாள் வீரர்களின் ஆதங்கம்: ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி கடைசி 6 போட்டிகளிலும் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது. இது குறித்து முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறுகையில், "சென்னையின் உடல்மொழி சரியில்லை. அணித் தேர்வு, பேட்டிங் வரிசை மற்றும் பந்துவீச்சு என எதையுமே அவர்கள் சரியாகக் கையாளவில்லை. இதையெல்லாம் உடனடியாகச் சரிசெய்தால் மட்டுமே சிஎஸ்கே மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப முடியும்," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர் தோல்விகளால் சிஎஸ்கே அணியின் கேப்டன் அல்லது பயிற்சியாளர் பதவியில் மாற்றங்கள் இருக்குமா? அல்லது அடுத்தடுத்த போட்டிகளில் வியூகங்களை மாற்றி வெற்றி பெறுவார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைத்தது ராஜஸ்தான்!
புதன் 20, மே 2026 5:15:00 PM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது ஹைதராபாத்!
செவ்வாய் 19, மே 2026 10:55:16 AM (IST)

டி20 கிரிக்கெட்டில் அதிவேக 3,000 ரன்கள்: சாய் சுதர்ஷன் சாதனை!
திங்கள் 18, மே 2026 4:49:24 PM (IST)

வெங்கடேஷ் ஐயர் அதிரடி: பஞ்சாப்பை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றிற்குள் நுழைந்தது!
திங்கள் 18, மே 2026 12:29:49 PM (IST)

மாநில அளவிலான கால்பந்து போட்டி: தூத்துக்குடி அணி 3-0 என அபார வெற்றி!
ஞாயிறு 17, மே 2026 9:25:35 AM (IST)

லக்னோவுக்கு எதிராக பந்துவீச்சு வியூகம் பலிக்கவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வேதனை!
சனி 16, மே 2026 4:34:27 PM (IST)


