» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்திய ஜூனியர் அணியில் கோவில்பட்டி ஹாக்கி வீரர் தேர்வு : பெல்ஜியம் தொடரில் விளையாட வாய்ப்பு!
வியாழன் 2, ஜூலை 2026 8:50:55 AM (IST)
பெல்ஜியத்தில் நடைபெற உள்ள சர்வதேச ஹாக்கி போட்டித் தொடருக்கான 22 பேர் கொண்ட இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழக வீரர் வி.மணிமாறன் இடம் பிடித்துள்ளார்.
இந்திய ஜூனியர் ஹாக்கி அணி வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை பெல்ஜியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த நாட்டு ஜூனியர் ஹாக்கி அணிக்கு எதிராகப் பல்வேறு போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டுள்ளது. இந்த சர்வதேசப் போட்டித் தொடருக்கான 22 வீரர்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ இந்திய அணி நிர்வாகத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக அன்மோல் எக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.இளம் திறமைகளைக் கொண்ட இந்த இந்திய அணியில், தமிழகத்தின் சார்பில் வி.மணிமாறன் தேர்வு செய்யப்பட்டுப் பெருமை சேர்த்துள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) விளையாட்டு விடுதி (Sports Hostel) வீரர் ஆவார். கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தில் தீவிரப் பயிற்சி பெற்று வந்த மணிமாறன், தனது சிறந்த ஆட்டத்திறனால் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளது கோவில்பட்டி மற்றும் தமிழக ஹாக்கி வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியையும், சோகக் செய்திகளுக்கு மத்தியில் இப்பகுதிக்கு மிகச் சிறந்த பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெறும் ₹100-க்கு ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பை விற்பனை செய்த டாடா ஸ்டீல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:24:48 PM (IST)

வயது முக்கியமல்ல, திறமைதான் முக்கியம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரெட் லீ பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:14:44 PM (IST)

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)

இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:46:27 PM (IST)


