» சினிமா » திரை விமர்சனம்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ விமர்சனம்!
வெள்ளி 2, மே 2025 4:24:27 PM (IST)

தூத்துக்குடியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஜோஜூ ஜார்ஜ், இறந்து போன தனது வேலையாளின் மகனான சூர்யாவை எடுத்து அடியாளாக வளர்க்கிறார். இதற்கிடையில் பூஜா ஹேக்டேவை காதலித்து திருமணம் செய்ய தயாராகும் சூர்யா, அடிதடியை விட்டு விட முடிவு செய்கிறார்.
கேரளாவில் கொள்ளையடித்த அரசு கருவூல பொருட்களை தனது தந்தைக்கு தெரியாமல் மறைக்கிறார். இதனால் ஆத்திரம் கொள்ளும் ஜோய் ஜார்ஜ் பூஜா ஹெக்டேவை கொலை செய்ய துணிய, அவரது கையை வெட்டி விடுகிறார் சூர்யா. சூர்யா சிறைக்கு செல்ல நாட்டை விட்டு தலைமறைவாகிறார் பூஜா ஹெக்டே. பூஜா ஹெக்டேவை தேடி சிறையில் இருந்து தப்பிக்கும் சூர்யா, அந்தமானுக்கு செல்கிறார். சூர்யா இருக்கும் இடத்தை அறிந்து ஜோஜூ ஜார்ஜ் தனது ஆட்களுடன் அந்தமானுக்கு செல்கிறார்.
இதற்கிடையில் அந்தமானில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ரவுடி கும்பலின் தலைவனுடன் சூர்யாவுக்கு பகை ஏற்படுகிறது. அனைத்து பிரச்சினைகளையும் சூர்யா முறியடித்தாரா? கருவூலப் பொருட்களின் கதி என்ன? பூஜா ஹெக்டே என்ன ஆனார்? என்பது பரபரப்பான மீதி கதை.
90 காலகட்டத்தை குறிப்பிடும் படத்தில் ஸ்டைலான லுக்கில் சூர்யா அசத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார். சிரிப்பு தெரியாமல் வளரும் சூர்யா சிரிக்க முயற்சி செய்யும் காட்சிகள் நேர்த்தி. மேக்கப் இல்லாத முகமாய் அழகான நடிப்பால் கவர்கிறார் பூஜா ஹெக்டே. நெளிவான அவரது நடனம் ரசிக்க வைக்கிறது. நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஜோஜூ ஜார்ஜின் நடிப்பு ஆர்ப்பரிப்பை கூட்டுகிறது. சுஜித் சங்கரின் வில்லத்தனம் பயமுறுத்துகிறது. சிரிப்பு டாக்டராக வரும் ஜெயராம், கருந்தீவின் தலைவனாக வரும் நாசர் ஆகியோரும் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளனர். பிரகாஷ் ராஜின் அனுபவ நடிப்பும் கை கொடுத்து இருக்கிறது.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக கண்களுக்கு விருந்து அளிக்கின்றன. 90 காலகட்டத்தை கண்முன் நிறுத்தி வியப்பை தருகிறார். சந்தோஷ் நாராயணனின் இசை ஆட்டம் போட வைக்கிறது. கனிமா பாடலுக்கு விசில் பறக்கிறது. லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே தென்பட்டாலும், விறுவிறுப்பான காட்சிகள் அதை மீறி ரசிக்க செய்கின்றன.
காதல் சிரிப்பு யுத்தம் என்ற கூட்டணி கலவையில், கணக்கே உரிய பாணியில் ரசிக்கும்படி திரைக்கதை அமைத்து மீண்டும் தனது முத்திரையை ஆழமாக பதித்து உள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். சூர்யா - பூஜா ஹெக்டே திருமண நிகழ்வை சொல்லும் 15 நிமிட காட்சியை ஒரே சிங்கிள் ஷாட் ஆக எடுத்திருப்பது அவரது முத்திரையைக் குறிக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஜித்தின் குட் பேட் அக்லி - திரை விமர்சனம்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 4:13:44 PM (IST)

வைபவ் நடித்துள்ள பெருசு படத்தின் திரைவிமர்சனம்
திங்கள் 17, மார்ச் 2025 12:32:12 PM (IST)

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா விமர்சனம்!
சனி 16, நவம்பர் 2024 4:14:18 PM (IST)

கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் திரை விமர்சனம்
செவ்வாய் 5, நவம்பர் 2024 7:51:37 PM (IST)

ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தின் விமர்சனம்
ஞாயிறு 3, நவம்பர் 2024 10:33:11 AM (IST)

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் விமர்சனம்
வெள்ளி 1, நவம்பர் 2024 5:53:56 PM (IST)
