» சினிமா » செய்திகள்

இந்தியன் 2 படம் நன்றாக இருக்கிறது” - ரஜினிகாந்த் கருத்து

திங்கள் 22, ஜூலை 2024 4:50:32 PM (IST)

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படம் நன்றாக உள்ளது” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இதையடுத்து சென்னை திரும்பிய அவரிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள், ‘கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படம் எப்படி உள்ளது?’ என கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "இந்தியன் 2 படத்தைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது” என்றார். தொடர்ந்து ‘வேட்டையன்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என கேட்டதற்கு, "வேட்டையன் படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லை. படத்தின் டப்பிங் பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது” என்றார்.

முன்னதாக, ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேதி குறிப்பிடப்படவில்லை. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு!

திங்கள் 9, செப்டம்பர் 2024 3:44:57 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory