» சினிமா » செய்திகள்

‘பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் : கமல்ஹாசன் அறிவிப்பு

புதன் 7, ஆகஸ்ட் 2024 12:18:02 PM (IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் நடந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த 7 சீசன்களாக நடந்துள்ளன. 8-வது சீசன் விரைவில் ஒளிபரப்பாகவும் இருக்கிறது.

இந்தநிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் நேற்று அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமாக உங்கள் இல்லங்களுக்கு வந்து உங்கள் அன்பையும், பாசத்தையும் பெற்றது பெருமையாக இருக்கிறது. அதற்காக நான் எப்போதும் நன்றி உணர்வோடு இருப்பேன். மேலும், நீங்கள் தந்த ஆதரவினால் தான் இந்தியாவின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ ஆக அந்த நிகழ்ச்சி மாறியிருக்கிறது. ஒரு தொகுப்பாளராக என் வாழ்க்கையில் கற்றுக் கொண்டதை நான் இந்த நிகழ்ச்சியில் நேர்மையாக பகிர்ந்து கொண்டேன். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். 

இதற்காக ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி. ஏற்கனவே ஒப்புக்கொண்டிருக்கும் படங்களில் நடிக்க வேண்டியதிருப்பதால், விரைவில் தொடங்கவுள்ள நிகழ்ச்சியை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை. இதனால் தொகுப்பாளர் பயணத்தில் சிறிய பிரேக் எடுத்துள்ளேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். கமல்ஹாசனின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு!

திங்கள் 9, செப்டம்பர் 2024 3:44:57 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory