» சினிமா » செய்திகள்
சூர்யாவின் ரெட்ரோ’ ஒரு முழுமையான காதல் கதை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 11:15:33 AM (IST)

"ரெட்ரோ ஒரு முழுமையான காதல் கதை; அதே நேரம் இதில் நிறைய ஆக்ஷனும் உண்டு" என இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து யூடியூப் பேட்டி ஒன்றில் கார்த்தி சுப்பராஜ் அளித்த பேட்டியில், "இது ஒரு கேங்ஸ்டர் கதை அல்ல. முதல்முறையாக நான் ஒரு காதல் கதையை எடுக்கிறேன். என்னுடைய முந்தைய படங்களில் நான் காதல் உறவுகளை ஆராய்ந்திருக்கிறேன் என்றாலும் கூட, இதுதான் ஒரு முழுமையான காதல் கதையாக வந்திருக்கிறது.
அதே நேரம் இதில் நிறைய ஆக்ஷனும் உண்டு. ஆனா இப்படம் ஒரு கேங்ஸ்டரை பற்றியது அல்ல. இந்தப் படத்தில் அதிகமாக காதல் உணர்வுகளை ஆராய்ந்திருக்கிறேன். அதனால்தான் இதனை முழுமையான காதல் படம் என்று சொல்கிறேன்.
நான் சூர்யாவை 2,3 வருடங்களுக்கு முன்பு ஒரு முறை சந்தித்தேன். ஆனால் அப்போது நான் அவருக்குச் சொன்னது வேறொரு கதை. அவருக்கும் அது பிடித்திருந்தது. ஆனால், அந்த நேரத்தில் நான் ‘மகான்’ படத்தில் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தேன். அதன் பிறகு அவருக்கு சில பட கமிட்மென்ட்கள் இருந்தன.
பின்னர் நான் ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ படத்தை தொடங்கி விட்டேன். அதனை முடித்த பிறகு மீண்டும் சூர்யாவை சந்தித்தேன். நாங்கள் ஏற்கனவே பேசிய படத்துக்கு நிறைய முன் தயாரிப்பு வேலைகள் தேவைப்பட்டதால், அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம்.
என்னிடம் வேறு ஏதேனும் கதை இருக்கிறதா என்று சூர்யா கேட்டார். அதுவரை அவர் செய்து வந்த கேரக்டர்களிலிருந்து விலகி ஏதாவது புதியதை முயற்சிக்க விரும்புவதாகப் பகிர்ந்து கொண்டார். ‘ரெட்ரோ’ கதையின் மையக்கரு அப்போதுதான் எனக்குள் தோன்றி இருந்தது. நான் அந்த யோசனையை முன்பே எழுதி வைத்திருந்தேன். அதை அவரிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது.
பின்னர் அவர் கொடுத்த ஒரு யோசனை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அதில் அதிகமான கமர்ஷியல் ஆக்ஷன் கூறுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, பிரதான கதாபாத்திரத்தை மேலும் வலுவானதாக மாற்ற சூர்யா பரிந்துரைத்தார். எனக்கு அது பிடித்திருந்தது. கதையின் வேறொரு வடிவத்தை எழுதினேன். அதன் பிறகு நாங்கள் உடனடியாக படத்தை தொடங்கினோம்” என்று கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)

கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை!
வியாழன் 26, ஜூன் 2025 5:44:50 PM (IST)
