» சினிமா » செய்திகள்
இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

இயக்குநர் ரவி அரசு மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மகுடம் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
 ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’. இதன் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதால், இப்படத்தினை விஷாலே இயக்கி வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தீபாவளி அன்று விஷால் வெளியிட்டார். கதை மட்டுமே ரவி அரசு எனவும், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் விஷால் எனவும் படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
 தற்போது விஷால் – ரவி அரசு இடையே மோதல் முற்றியுள்ளது. இதனால் ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பினை பெப்சி அமைப்பு மற்றும் இயக்குநர்கள் சங்கம் இணைந்து நிறுத்தியிருக்கிறார்கள். ரவி அரசு இடமிருந்து படத்தினை விஷால் இயக்க ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே தொடங்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
 இப்படத்தினை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்து வருகிறார். இதன் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள்.
 இப்படத்தினை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்து வருகிறார். இதன் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது  படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!
புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)

தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் குக் வித் கோமாளி பிரபலம்!
புதன் 29, அக்டோபர் 2025 11:03:27 AM (IST)

கபாலி வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி லாபம்: பா.ரஞ்சித் பேச்சு!
திங்கள் 27, அக்டோபர் 2025 3:34:45 PM (IST)

ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி இல்லை: செல்வராகவன் ஆதங்கம்
சனி 25, அக்டோபர் 2025 3:48:52 PM (IST)

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
வியாழன் 23, அக்டோபர் 2025 5:46:39 PM (IST)

