» சினிமா » செய்திகள்

பராசக்தி படத்திற்கு யுஏ சான்றிதழ்: நாளை வெளியாகிறது

வெள்ளி 9, ஜனவரி 2026 12:58:38 PM (IST)

பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றாலும், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் நடித்திருப்பதால் இப்படத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதை உருவாகியுள்ள ‘பராசக்தி’ படம் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி ஏற்பட்டது. ஜனநாயகன் படத்தை போலவே, ‘பராசக்தி’ படத்துக்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது.

தணிக்கை வாரியம் ‘பராசக்தி’ படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் பரிந்துரை செய்திருந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.இந்த நிலையில், கோட்டில் உத்தரிவின் பேரில் தணிக்கை வாரியம் பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. 

நாளை (ஜன.10) திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று (ஜன.9) தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது.ஜனநாயகன் திரைப்பட வெளியீடு இன்னும் உறுதியாகாத நிலையில் பராசக்தி திரைப்படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory