» சினிமா » செய்திகள்
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:16:58 PM (IST)

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிட்டுள்ளது..
நடிகர் சிவகார்த்திகேயன் தன் 26-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, தாய் கிழவி திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இப்படத்தின் கதை முழுக்க, மதுரை பின்னணியில் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில், புதிய புரோமோவை வெளியிட்டுள்ளனர். இதில், விருமாண்டி வேடம் கட்டும் கதாபாத்திரமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், இப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படப்பிடிப்புத் தளத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் திடீர் வருகை!
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

யஷ் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் திடீர் விபத்து: 4 பேர் படுகாயம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:40:34 PM (IST)

கார் ரேஸில் விபத்து: நடிகர் அஜித் குமார் லேசான காயங்களுடன் தப்பினார்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:31:00 PM (IST)

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்: முதல்வர் விஜய் இரங்கல்
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 3:46:35 PM (IST)

ரஜினியின் ‘தர்மன்’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வீடியோவை வெளியிட்ட படக்குழு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:55:30 PM (IST)

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் வந்த வினை - நடிகை ஷகிலா வேதனை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:42:45 PM (IST)

