» சினிமா » செய்திகள்

ஹாரர் - சயின்ஸ் பிக்சன் : ரைசா வில்சன் நடிக்கும் நோவா!

வியாழன் 5, மார்ச் 2026 12:08:49 PM (IST)



ஆதி - ஹன்சிகா நடிப்பில் வெளியான 'பார்ட்னர்' திரைப்படத்தைத் தொடர்ந்து, ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘நோவா: பேஸ் ஒன் - தி அரைவல்’ 

ஹாரர், சயின்ஸ் பிக்சன், சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி மற்றும் திரில்லர் எனப் பல ஜானர்கள் கலந்த ஒரு வித்தியாசமான களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மைலோ, இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
நட்சத்திரப் பட்டாளம்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் 'பியார் பிரேமா காதல்' புகழ் ரைசா வில்சன் ஒரு வலுவான கம்பேக் கொடுக்கிறார். ஆண்மை தவறேல்' துருவா, கன்னட நடிகை அத்விதி ஷெட்டி, பெங்காலி நடிகை கிருத்திகா பிஸ்வாஸ், சென்ராயன், யூடியூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் கிருஷ்ணா ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோவின் தம்பி ஜோ ஜான் சாக்கோ இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்திற்கு யுவராஜ் சந்திரன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் கே.வி. குகனிடம் பணியாற்றிய கிறிஸ்டோ பாப் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை பிரேம்.பி கவனிக்க, தேவேந்திரன் கலை இயக்கத்தையும், ராம்போ விமல் சண்டைக் காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் மைலோ பேசுகையில்: "இந்தக் கதையை ஒரே ஜானருக்குள் அடக்கிவிட முடியாது. கன்னடம், மலையாளம், பெங்காலி எனப் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த நட்சத்திரங்களை ஒன்றிணைத்துள்ளோம். படப்பிடிப்பு முழுவதும் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தெலுங்கு உரிமையை ஏற்கனவே ஒரு பிரபல நிறுவனம் பெற்றுள்ளது. விரைவில் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்புகள் வெளியாகும்." என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory