» சினிமா » செய்திகள்
வால்மீகி ராமாயணா திரைப்படத்திற்கு இளையராஜா இசை: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:45:45 PM (IST)

இந்தியத் திரையுலகின் முன்னணித் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணையும் 'வால்மீகி ராமாயணா' திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரபல இந்திய நாவலாசிரியர் ஆனந்த் நீலகண்டனின் திரைக்கதையைத் தழுவி, இயக்குநர் பாவ்னா தத்தா தல்வார் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட கலைஞர்கள் கைகோர்த்துள்ளனர்:
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: வினோத் பிரதான்
தயாரிப்பு வடிவமைப்பு: சாபூ சிரில்
ஒலி வடிவமைப்பு: ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி
நேற்று வெளியான படத்தின் புதிய போஸ்டர் மூலம் இளையராஜாவின் பங்களிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 2026 அக்டோபர் 2-ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரங்களை இதுவரை படக்குழு வெளியிடவில்லை. இதனால், இது நேரடித் திரைப்படமா அல்லது அனிமேஷன் முறையில் உருவாக்கப்படுகிறதா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
தற்போது இந்திய சினிமாவில் ராமாயணத்தை மையமாகக் கொண்டு பிரம்மாண்டத் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. ரன்பீர் கபூர் - சாய் பல்லவி நடிக்கும் 'ராமாயணா', ரிஷப் ஷெட்டி நடிக்கும் 'ஜெய் ஹனுமான்' ஆகிய படங்களின் வரிசையில், தற்போது 'வால்மீகி ராமாயணா' படமும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கணித மேதை ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தியா ப்ரீத்தி முகுந்தன்? - உண்மைப் பின்னணி
திங்கள் 20, ஜூலை 2026 11:58:48 AM (IST)

72வது தேசிய திரைப்பட விருதுகள்: ராயன், கேப்டன் மில்லர், மெய்யழகன் படங்களுக்கு விருதுகள்!
சனி 18, ஜூலை 2026 8:25:07 PM (IST)

ஜனநாயகன்’ பட வெளியீட்டைத் திருவிழா போல் கொண்டாட வேண்டும்: ஆனந்த் அறிவுறுத்தல்!
சனி 18, ஜூலை 2026 4:16:27 PM (IST)

ஹாப்பி ராஜ் படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த தடை- உயர் நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 6, ஜூலை 2026 12:28:49 PM (IST)

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தில் 6 இயக்குநர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 12:09:16 PM (IST)

அரசன் படம் வசூலில் சினிமா உலகை ஓர் உலுக்கு உலுக்கும்: தயாரிப்பாளர் தாணு நம்பிக்கை!
சனி 4, ஜூலை 2026 5:36:02 PM (IST)

