» சினிமா » செய்திகள்
100 மில்லியன் பார்வையாளர்கள்: யூடியூப்பில் கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடல் புதிய சாதனை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:05:45 PM (IST)

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தின் ‘பவர்ஹவுஸ்’ பாடல், யூடியூபில் 10 கோடி (100 மில்லியன்) பார்வையாளர்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், அனிருத்தின் இசை படத்திற்குப் பெரும் பலமாக அமைந்தது. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற ‘பவர்ஹவுஸ்’ மற்றும் ‘மோனிகா’ ஆகிய பாடல்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தின. பலரும் இந்தப் பாடல்களுக்கு ‘ரீல்ஸ்’ (Reels) செய்து பகிர்ந்ததால், இப்பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தன.
அனிருத் இசையமைப்பில், பாடலாசிரியர் அறிவு எழுதிப் பாடிய ‘பவர்ஹவுஸ்’ லிரிக்கல் வீடியோ தற்போது 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களின் பட்டியலில் இப்பாடல் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியாகி ஓராண்டைக் கடந்த பின்னரும், இப்பாடலுக்கான மவுசு குறையாமல் இருப்பது ரஜினி - அனிருத் கூட்டணியின் மேஜிக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இச்சாதனையை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் ‘ஹேஷ்டேக்’ உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இறுதி கட்டத்தை எட்டிய ஜன நாயகன் சென்சார் பணிகள்: மே 8-ல் ரிலீஸ்? - ரசிகர்கள் உற்சாகம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:03:15 PM (IST)

சல்மான் கான் - நயன்தாரா கூட்டணியின் புதிய படம்: ஈகைத் திருநாளுக்கு வெளியீடு!
சனி 25, ஏப்ரல் 2026 11:55:40 AM (IST)

ஜனநாயகன் திரைப்படம் லீக் விவகாரம்: படத்தொகுப்பாளர் இடை நீக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:09:09 AM (IST)

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? - கமல்ஹாசன் பதில்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:06:07 PM (IST)

ஜனாதிபதி விருந்தில் நடிகை பிரியங்கா மோகன்: தென் கொரிய அதிபருடன் சந்திப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 4:49:10 PM (IST)

ஜெயிலர்-2 படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:26:37 PM (IST)

