» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

கயிற்றுக் கட்டிலில் உறங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?



சித்த மருத்துவத்தில் படுக்கைக்கும் நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகைப் பாயில் படுக்கும்போதும் நமக்கு ஒருவித நன்மை கிடைக்கும். படுத்து ஓய்வு எடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே கயிற்றுக்கட்டில். தென்னை நார், பனை நாரால் திரிக்கப்பட்ட கயிற்றால் இது பின்னப்படுவதால், இதில் படுத்தால் உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். உடற்சூடு தணியும்.

சித்த மருத்துவ வகைப்பாட்டின்படி 4,448 நோய்கள் உள்ளன. அதில் 4,000 நோய்கள், பித்தம் அதாவது உடற்சூட்டால் உண்டாவது மூலநோய் முதல் சர்க்கரைநோய் வரை முதன்மைக் காரணமாக பித்தம்தான் இருக்கிறது. முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் நார்களால், மரத்தால் ஆன நாற்காலிகள்தான் பயன்படுத்தப்பட்டன. அதற்குக் காரணமே உடலில் சூடு தங்கிவிடக் கூடாது என்பதுதான். ஏனென்றால் உடலை, எப்போதும் காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நம் உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியக்களால் நமக்கு நன்மை கிடைக்கும்.

இலவம் பஞ்சைத் தவிர மற்ற வகைப் பஞ்சு மெத்தைகளில் படுப்பது நல்லதல்ல. இப்போது கிடைக்கும் ஸ்பிரிங் மெத்தைகளில் படுத்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்படும். கயிற்றுக் கட்டிலில் படுத்தால், அது நம் உடலுக்குத் தகுந்தவாறு வளைந்து கொடுக்கும். ஆனால் ஸ்பிரிங் மெத்தைகளில், அதற்கு ஏற்றவாறு நாம் உடலை வளைந்து கொடுக்க வேண்டும். தண்டுவடப் பிரச்னைகள், சூடு சம்பந்தமான பிரச்னைகள் உண்டாவதற்கு மெத்தைகள்தாம் முக்கியக் காரணம்" "அப்படியானால், தரையில் படுத்துத் தூங்கலாமா?’’


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory