திருநெல்வேலியின் வரலாறு (13 of 14)

பழங்குடிகள்
 
திருநெல்வேலி மாவட்டத்தில் பலியர், பளிஞர் காணியர் முதலியோர் உள்ளனர்.
 
பலியர் : சங்கரன் கோயில் வட்டத்தில் வாசுதேவ நல்லூருக்கருகில் தலையணை என்னுமிடத்தில் வாழ்கின்றனர். குள்ள உருவமும் பரந்த தலை முடியையும் கொண்டவர்கள். தேனெடுத்தல், மான் வேட்டை இவர்களின் முக்கியத் தொழில்கள்.
 
பளிஞர் : பொதிகை மலையில் கலியாண தீர்த்தத்துக்கு 16 கி.மீ அப்பால் இவர்களின் குடியிருப்பு உள்ளது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. சொக்கி என்ற குழல் கருவியை வாசிக்கின்றனர். மலையாளத் தமிழில் தமிழ் பேசுவது இவர்கள் மரபு.
 
காணியர் : நெல்லை மாவட்டத்தில் 'காணியர்' பாபநாசம் கீழ் அணைக்கட்டில் வாழ்கின்றனர். இவர்கள் வேளாண்மைத் தொழில் செய்கின்றனர்.
 
பாரம்பரிய ஏற்றுமதி பொருள்கள்
 
பனை ஓலை ஈர்க்கிலிருந்து செய்யப்படும் வலை கூடுகள் வெங்காயம் அழுகாமல் காப்பாற்றுகிறது. கப்பல்களில் விரிக்கக் கூடியதும், கசியாமல் பொருள்களை காப்பாற்றும் பனையோலை பாய்கள், கொச்சி, பம்பாய் துறை முகங்களுக்குச் செல்கின்றன.
 
அமெரிக்காவில் சாலைகள் சுத்தம் செய்யப்பயன்படுத்தப்படும் பனைநார் மிகுதியாக இங்கிருந்து தான் ஏற்றுமதிசெய்யப்படுகிறது.


Favorite tags



Tirunelveli Business Directory