» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகள் முறியடிப்பு: இந்திய ராணுவம் அதிரடி

சனி 10, மே 2025 11:18:54 AM (IST)



எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள எக்ஸ் தள பதிவில் வீடியோ ஒன்றையும் ராணுவம் பகிர்ந்துள்ளது.

அதில், ‘தேசத்தின் மேற்கு எல்லை பகுதியில் ட்ரோன் மற்றும் வெடிகுண்டுகளை கொண்டு பாகிஸ்தான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒன்றாக இன்று (மே 10) காலை 5 மணி அளவில் அமிர்தசரஸில் உள்ள ஒரு பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் அடையாளம் காணப்பட்டன. அதை நமது வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் நமது பாதுகாப்பு படையினர் வானில் இடைமறித்து அழித்தனர்.

இந்தியாவின் இறையாண்மையை மீறும், நாட்டு மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான பாகிஸ்தானின் இந்தச் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி மற்றும் அது சார்ந்த திட்டங்களை ராணுவம் முறியடிக்கும்’ என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

விமான நிலையங்கள் மூடல்: 

இதனிடையே, எல்லையில் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் மே 14 வரை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, பூஜ், பிகானேர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மேர், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், காண்ட்லா, காங்க்ரா (ககல்), கேஷோத், கிஷன்கர், குலு மணாலி (பூந்தர்), லெஹ், லூதியானா, லே, லூதியானா, பத்ரா, லூதியானா, போர்பந்தர், ராஜ்கோட் (ஹிராசர்), சர்சாவா, சிம்லா, ஸ்ரீநகர், தோயிஸ் மற்றும் உத்தரலை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory