» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்!

சனி 10, மே 2025 3:47:49 PM (IST)



காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் நடத்திவரும் தாக்குதலை முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதோடு, பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அரசின் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் எஸ்.ராஜ்குமார் தப்பா பங்கேற்ற நிலையில், ரஜௌரியில் பாகிஸ்தான் அத்துமீறி இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் அவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் நிர்வாக பணிகளில் பொறுப்புமிக்க ஒரு அரசு அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம். நேற்று மாவட்டம் முழுவதும் துணை முதல்வருடன் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். மேலும், எனது தலைமையில் நடைபெற்ற ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார். 

இந்தநிலையில் ரஜௌரி நகரத்தை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அதிகாரி ராஜ் குமார் தாப்பா வீடு தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டுள்ளார். அவரது உயிரிழப்பால் தனக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory