» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து: பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி!!

சனி 10, மே 2025 4:56:04 PM (IST)

இந்தியா-பாகிஸ்தான் போர்ப் பதற்றம் எதிரொலியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 19ஆம் தேதி சாமி தரிசனம் செய்ய திட்டமிட்ருந்தார். திட்டத்தின் படி, குடியரசுத் தலைவர் முர்மு கேரள மாநிலம், நிலக்கல் ஹெலிபேடில் தரையிறங்கி, பின்னர் பம்பாவிலிருந்து சபரிமலைக்கு மலையேற்றப் பாதையில் ஏற இருந்தார்.

இதையொட்டி முர்முவின் பயன்பாட்டிற்காக சன்னிதானத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் இரண்டு அறைகளை திருவிதாங்கூர் தேவசம் வாரியம் புதுப்பித்திருந்தது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பொது தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டதால் இந்த நாள்களில் பக்தர்களின் பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி வங்கப்பட்டிருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory