» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 3 பேருக்கு தூக்குத்தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 11, ஜூலை 2025 8:23:20 AM (IST)
பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வழக்கில் 3 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேற்குவங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் ராஜ்குஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்த சிறுமி காணாமல் போனதாக ராஜ்குஞ்ச் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பக்கத்து கிராமத்தை சேர்ந்த ரகுமான் அலி, ஜமிருல், தமிருல் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் அந்த சிறுமியை கடத்திச் சென்று, அந்த பகுதியில் உள்ள ஓட்டல்களில் அடைத்து வைத்து பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததும், பின்னர் அந்த சிறுமியை கழுத்தை நெரித்து கொன்று, உடலை கழிவுநீர் தொட்டியில் வீசியதும் தெரிய வந்தது.
இதையடுத்து ரகுமான் அலி, ஜமிருல், தமிருல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஜல்பைகுரியில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி ரிந்து சுர் வழக்கை விசாரித்து ரகுமான் அலி உள்பட 3 பேரையும் நேற்று முன்தினம் குற்றவாளிகள் என்று அறிவித்தார்.
அவர்களுக்கான தண்டனை நேற்று வழங்கப்பட்டது. இதற்காக அவர்கள் 3 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ரிந்து சுர் தனது இருக்கையில் வந்து அமர்ந்ததும் தீர்ப்பை வாசித்தார். அப்போது அவர், இந்த குற்றம் அரிதிலும் அரிதானது. எனவே குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)
