» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!
வெள்ளி 11, ஜூலை 2025 12:44:15 PM (IST)
75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும் என்று அர்த்தம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.

அவரது இயல்பு மிகவும் நகைச்சுவையானது. மோரோபந்த் பிங்லி தேச சேவையில் அர்ப்பணிப்புடன் இருந்தார். தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். "நீங்கள் வயதாகிவிட்டீர்கள்… ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவரின் இந்த பேச்சு பல்வேறு யூகங்களுக்கும் விவாதங்களுக்கும் வித்திட்டுள்ளது. செப்டம்பர் 11ம் தேதியோடு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் 75 வயதை பூர்த்தி செய்கிறார். இந்த ஆண்டு ஓய்வு பெறப் போவதை மோகன் பகவத் சூசகமாக தெரிவித்துள்ளார். மோகன் பகவத்தின் இந்த பேச்சு விவாதங்களுக்கு களம் அமைத்துள்ளது. பிரதமர் மோடியும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 75 வயதை அடையவுள்ளார்.
எதிர்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு குறித்து கேள்வி கேட்க தூண்டி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பிரதமர் மோடிக்கு இப்போது 74 வயது ஆகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு மோடி வந்த போதும் அவரது ஓய்வு குறித்த விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் கூறுகையில், எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி மற்றும் ஜஸ்வந்த்சிங் போன்ற தலைவர்களை 75 வயது நிரம்பிய பிறகு ஓய்வு பெற பிரதமர் மோடி கட்டாயப்படுத்தினார். இப்போது அதே விதியை அவர் தனக்கும் பயன்படுத்துகிறாரா? என்று பார்ப்போம் என கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)
