» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேர்தல் ஆணையம் பாஜக நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வெள்ளி 11, ஜூலை 2025 3:47:41 PM (IST)

தேர்தல் ஆணையம் அதன் கடமையைச் செய்யவில்லை. பாஜகவின் நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது: மகாராஷ்டிராவை போன்று, பீகாரிலும் தேர்தலை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நாடு முழுவதும் நமது அரசியலமைப்பை பாஜக தாக்கிக் கொண்டு வருகிறது.
நேற்று இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகாரில் தேர்தலை பாஜக அபகரிப்பதை தடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதன் வேலையை செய்யவில்லை. பாஜகவின் நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது. பாஜக ஐந்து முதல் ஆறு முதலாளிகளுக்காக அரசாங்கத்தை நடத்துகிறது. நாட்டின் பொது மக்களுக்கான பணி செய்யவில்லை.
"ஜல், ஜங்கல், ஜாமின்" பழங்குடியினருக்கு சொந்தமானது. அவைகைள் அவர்களுக்கே இருக்கும். வன உரிமைப் பட்டாக்கள் பழங்குடியினருக்கு வழங்கப்படவில்லை. காங்கிரஸ் PESA மற்றும் பழங்குடி மசோதாவைக் கொண்டு வந்தது. இந்த சட்டங்களை நாங்கள் அமல்படுத்துவோம், பழங்குடியினருக்கு அவர்களின் நிலம் கிடைப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)
