» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்து, பௌத்தர், சீக்கியர்களை தவிர பிறரின் எஸ்சி சாதி சான்றிதழ் ரத்து : பட்னாவிஸ் அறிவிப்பு!

வெள்ளி 18, ஜூலை 2025 11:58:31 AM (IST)

மகாராஷ்டிராவில் இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி (SC) சான்றிதழ் பெற்றிருந்தால், அவை ரத்து செய்யப்படும் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

அத்தகைய சான்றிதழ்கள் மூலம் அரசு வேலைகள் அல்லது ஆதாயங்கள் பெற்றிருந்தால், அவை செல்லாததாக்கப்படும் என்றும், பணப் பலன்கள் இருந்தால் அவை வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பட்டியல் சாதி இடஒதுக்கீடு இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற உச்ச நீதிமன்றத்தின் 2024 தீர்ப்பை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க வலுவான சட்ட விதிகள் கொண்டு வரப்படும் என்றும் பட்னாவிஸ் கூறினார். வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory