» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திங்கள் 21, ஜூலை 2025 8:24:00 PM (IST)
கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 101.
கேரள முன்னாள் முதல்-அமைச்சர் அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் உள்ள அச்சுதானந்தன் உடல் நலன் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அப்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டது.கடந்த சில மணி நேரங்களாக அவரது ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் அச்சுதானந்தன் இன்று மாலை காலமானார்.அச்சுதானந்தன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன்றனர். அந்தவகையில்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில், கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன்; கொள்கை ரீதியான அரசியல், பொது சேவை உணர்வை கொண்ட பெருந்தலைவர் அவர். தமிழ்நாட்டு மக்கள் சார்பாக செவ்வணக்கம்.அவரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கும், சிபிஐஎம் பணியாளர்களுக்கும், கேரள மக்களுக்கும் எனது இரங்கல்.. எனது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் அமைச்சர் ரகுபதி அஞ்சலி செலுத்துவார் என அதில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த ஜூன் 23 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு மாதமாக வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததது. அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து இன்று பிற்பகல் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர்.
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி பிற்பகல் 3.20 மணிக்கு அச்சுதானந்தன் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் உள்ள அச்சுதானந்தன் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக செவ்வாய்க்கிழமை முழுவதும் வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து, புதன்கிழமை இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)
