» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா
செவ்வாய் 22, ஜூலை 2025 11:21:39 AM (IST)
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் மருத்துவ காரணங்களால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களால் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். தனது பதவிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த ஆதரவு விலை மதிக்க முடியாதது என்று ராஜினாமா கடிதத்தில் தன்கர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 1951 மே 18-ம் தேதி பிறந்தவர் ஜெகதீப் தன்கர். கடந்த 2003-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றிய தன்கர் 2022-ல் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.
முன்னதாக, கடந்த ஜூலை 10-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்கர், 2027 வரை பதவியில் நீடிக்கப் போவதாகவும், அதன் பிறகே ஓய்வுபெற போவதாகவும், அதுவே சரியான தருணமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)
