» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை : தேர்தல் ஆணையம் மறுப்பு!

வியாழன் 18, செப்டம்பர் 2025 3:49:23 PM (IST)

ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கான வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர்.குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள்,பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்கு திருட்டு தொடர்பாக பலமுறை கேள்விப்பட்டிருந்தாலும், தற்போது தான் 100 சதவீதம் ஆதாரத்தை கண்டறிந்துள்ளோம். ஜனநாயக நடைமுறைகளை பாதுகாப்பதற்காகவே இதனை நான் செய்கிறேன்.

வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்.லட்சக்கணக்கானோரை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம், வாக்கு திருட்டு மூலம் இந்திய ஜனநாயகம் அழிக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.தால் 3 வயது குழந்தையை ஏரியில் வீசி கொன்ற தாய்

இந்தநிலையில், ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை. ராகுல் காந்தி கூறியதுபோல் ஆன்லைன் மூலம் வாக்காளர்கள் யாரும் நீக்கப்படவில்லை. 2023-ல் அலந்த் தொகுதியில் பெயரை நீக்க சில முயற்சி நடந்தபோது, அதுபற்றி தேர்தல் ஆணையமே புகார் தந்தது.

அலந்த் தொகுதியின் 2018-ல் பாஜக வேட்பாளரும், 2023-ல் காங்கிரஸ் வேட்பாளருமே வென்றனர் என வாக்காளர் பட்டியலில் முறைகேடு என ராகுல் காந்தி அளித்த பேட்டியை பகிர்ந்தது தேர்தல் ஆணையம் எக்ஸ் தள பதிவில் விளக்கம் அளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory