» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவில் மின்வாகன சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் கோடியை தொடும்: நிதின் கட்காரி தகவல்
வியாழன் 4, டிசம்பர் 2025 5:33:58 PM (IST)
இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் கோடியை தொடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மக்களைவையில் கூறியதாவது: தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024 - 25 மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மின்சாரத்தில் இயங்கும் கார்களின் விற்பனை 20.8 சதவீதமும், டூவிலர்களின் விற்பனையும் 33 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் 18 சதவீதமும் அதிகரித்துள்ளது.அதேபோல், பெட்ரோல், டீசல் கார்களின் கார்களின் விற்பனையும் 4.2 சதவீதமும், டூவிலர்களின் விற்பனையும் 14 சதவீதமும் மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் 6 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2030 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் சந்தை 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். ஆண்டுக்கு 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் 400 க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களின் ஸ்டார்ட் அப் சந்தையை உருவாக்கும் என கட்காரி கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 24, ஜனவரி 2026 5:43:32 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்; விமானங்கள் ரத்து
சனி 24, ஜனவரி 2026 12:04:20 PM (IST)

கர்நாடகத்தில் பைக் டாக்ஸி மீதான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 23, ஜனவரி 2026 5:07:26 PM (IST)

கேரளாவுக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்: பினராயி விஜயன் நன்றி!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:39:21 PM (IST)

திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான வழக்கு : மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:53:57 AM (IST)

தூக்க மாத்திரைகள் கொடுத்து கணவனை கொன்ற மனைவி: தலைமறைவான கள்ளக்காதலனுக்கு வலை!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:51:14 AM (IST)

