» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள்: பிரதமர் மோடி பெருமிதம்!

சனி 24, ஜனவரி 2026 5:43:32 PM (IST)

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/Modiji_1769256765.jpg18வது ரோஜ்கர் மேளா தில்லியின் இன்று நடைபெற்றது. அந்த திட்டத்தின் கீழ் 61 ஆயிரம் பணி நியமனக் கடிதங்களை அளிக்கும் திட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்து பேசியதாவது, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், இந்தியா பல நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் இடம்பெயர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. தனது அரசு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையைச் செயலாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சிதான் இந்த ரோஜ்கர் மேளா.

மேளா தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட ரோஜ்கார் மேளாக்கள் மூலம் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 18வது ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் 45 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதாகப் பணியமர்த்தப்பட்ட வேட்பாளர்கள், அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் சேர்ந்தனர்.

புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்கள் உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை, உயர் கல்வித் துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றுவார்கள் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory