» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெங்களூரு விமான நிலையத்தில் கொரிய பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: ஊழியர் கைது!
வியாழன் 22, ஜனவரி 2026 5:11:36 PM (IST)
கொரியாவில் இருந்து சுற்றுலா வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பெங்களூரு விமான நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் சுற்றுலாவுக்காக வருகைதந்த கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து சொந்த நாட்டுக்குப் புறப்படவிருந்தார். குடியேற்றத் துறை சோதனைக்குப் பிறகு விமானத்துக்குச் செல்ல தயாரான போது, அவரை அணுகிய விமான நிலைய ஊழியர் அஃபான் அகமது என்பவர், அவரின் உடமை பைகளில் சப்தம் வருவதாகவும் சோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரை தனிப்பட்ட முறையில் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, கழிப்பறை பகுதி அருகே அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அப்பகுதியைவிட்டு உடனடியாக அகமது புறப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெங்களூரு விமான நிலைய காவல் துறையினரிடம் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட அகமதுவை கைது செய்து பெங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் சுற்றுலாவுக்காக வருகைதந்த கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து சொந்த நாட்டுக்குப் புறப்படவிருந்தார். குடியேற்றத் துறை சோதனைக்குப் பிறகு விமானத்துக்குச் செல்ல தயாரான போது, அவரை அணுகிய விமான நிலைய ஊழியர் அஃபான் அகமது என்பவர், அவரின் உடமை பைகளில் சப்தம் வருவதாகவும் சோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.பின்னர் அவரை தனிப்பட்ட முறையில் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, கழிப்பறை பகுதி அருகே அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அப்பகுதியைவிட்டு உடனடியாக அகமது புறப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெங்களூரு விமான நிலைய காவல் துறையினரிடம் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட அகமதுவை கைது செய்து பெங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 வீரர்கள் பலி!
வியாழன் 22, ஜனவரி 2026 3:45:41 PM (IST)

கேரள நபர் தற்கொலை: பாலியல் தொல்லை வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது!
புதன் 21, ஜனவரி 2026 4:50:10 PM (IST)

மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை மாநில காவல்துறை விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம்
புதன் 21, ஜனவரி 2026 4:03:21 PM (IST)

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:31:57 PM (IST)

கோவையில் ஏழுமலையான் கோயில் பணிகள் விரைவில் துவங்கும் : தேவஸ்தான அதிகாரி தகவல்
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:29:04 PM (IST)

பணி நேரத்தில் பெண்களுடன்... ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்ட்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 11:49:20 AM (IST)

