» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை : பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:25:58 AM (IST)

இரு நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லி வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார். அதிபர் புதினுக்கு நேற்றிரவு அவர் சிறப்பு விருந்து அளித்தார்.
இரு தலைவர்களும் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அப்போது இரு நாடுகள் இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2000-ம் ஆண்டில் முதலாவது இந்திய, ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த வரிசையில் 22-வது உச்சி மாநாடு கடந்த ஆண்டு ஜூலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக 23-வது இந்திய, ரஷ்ய உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று மாலை 6.35 மணிக்கு டெல்லிக்கு வந்தார். டெல்லி பாலம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் வரவேற்றார். ஆரத் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சார்பில் அதிபர் புதினுக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, நேற்றிரவு பிரதமர் தனது இல்லத்தில் புதினுக்கு இரவு விருந்தளித்தார். அப்போது, ரஷிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை புதினுக்கு பரிசாக அளித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, ”கீதையின் போதனைகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகை செல்லும் புதினுக்கு அணிவகுப்பு மரியாதை அளித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரவேற்கவுள்ளார்.
தொடர்ந்து, ஹைதராபாத் மாளிகையில் நடைபெறும் 23-ஆவது இந்திய - ரஷிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு புதினும், மோடியும் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.ராணுவ தளவாடங்கள், வர்த்தகம் உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஆலோசனையில் இருநாட்டுத் தலைவர்களும் ஈடுபடவுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின்னர், பல முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாக இருக்கிறது.
இதன்பிறகு டெல்லி ஐடிசி மவுரியா ஓட்டலில் அதிபர் புதின் நேற்றிரவு தங்கினார்.குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு அவருக்கு ராணுவ அணி வகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன்பிறகு மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் புதின் அஞ்சலி செலுத்துகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 24, ஜனவரி 2026 5:43:32 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்; விமானங்கள் ரத்து
சனி 24, ஜனவரி 2026 12:04:20 PM (IST)

கர்நாடகத்தில் பைக் டாக்ஸி மீதான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 23, ஜனவரி 2026 5:07:26 PM (IST)

கேரளாவுக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்: பினராயி விஜயன் நன்றி!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:39:21 PM (IST)

திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான வழக்கு : மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:53:57 AM (IST)

தூக்க மாத்திரைகள் கொடுத்து கணவனை கொன்ற மனைவி: தலைமறைவான கள்ளக்காதலனுக்கு வலை!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:51:14 AM (IST)

