» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
10 முறை முதல்-அமைச்சர் : உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிதிஷ்குமார்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:55:32 PM (IST)
சுதந்திர இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ்குமார் பெயர் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. இதற்கு நவ.6 மற்றும் நவ.11 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளை வென்று அசத்தி அமோக வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.இந்தநிலையில், அரசியலில் ஈடு இணையற்ற பங்களிப்பை அளித்ததற்காக லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தால் நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். சுதந்திர இந்தியாவின் ஒரு மாநில முதல்-மந்திரியாக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ்குமார் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா வெளியிட்டு உள்ளார்.
10வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் அடைந்த அசாதாரண மைல் கல்லை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகம் (World book of Records) அங்கீகரித்துள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இது இந்தியாவின் ஜனநாயக பயணத்தில் உண்மையிலேயே அரிய சாதனை.
பீகார் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். பத்து முறை ஒரு மாநிலத்தை வழிநடத்துவது என்பது வெறும் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல. இது பீகாருக்கு ஒரு வரலாற்று தருணமாகவும் அதன் ஜனநாயக வலிமைக்கு ஒரு சான்றாகவும் நிற்கிறது. பீகாருக்கு ஒரு பெருமையான தருணம். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து வழிகாட்டும் நிலையான அர்ப்பணிப்புள்ள தலைவரை போற்றுவோம் என அதில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 24, ஜனவரி 2026 5:43:32 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்; விமானங்கள் ரத்து
சனி 24, ஜனவரி 2026 12:04:20 PM (IST)

கர்நாடகத்தில் பைக் டாக்ஸி மீதான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 23, ஜனவரி 2026 5:07:26 PM (IST)

கேரளாவுக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்: பினராயி விஜயன் நன்றி!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:39:21 PM (IST)

திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான வழக்கு : மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:53:57 AM (IST)

தூக்க மாத்திரைகள் கொடுத்து கணவனை கொன்ற மனைவி: தலைமறைவான கள்ளக்காதலனுக்கு வலை!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:51:14 AM (IST)

