» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சின்னச்சாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறும்: டி.கே.சிவகுமாா்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:37:23 AM (IST)
பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
2025 ஐபிஎல் கோப்பையை வென்ற ஆா்சிபி அணி கடந்த ஜூன் 4-ஆம் தேதி பெங்களூரில் நடத்திய வெற்றிப் பேரணியில் 11 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடா் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்துவது குறித்து பல ஐயங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தலைவா் தோ்தலில் நேற்று வாக்கு செலுத்திவிட்டு செய்தியாளா்களிடம் டி.கே.சிவகுமாா் கூறியதாவது: நான் கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகன். கா்நாடகத்தில் கூட்டநெரிசலால் ஏற்பட்ட விபத்துகள் இனி நிகழாது என உறுதியளிக்கிறோம். அடுத்த ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்.
அங்கு கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் முறையாகப் பின்பற்றப்படும்.கா்நாடகம் மற்றும் பெங்களூரின் பெருமையாக கருதப்படும் சின்னசாமி மைதானத்தைவிட்டு வேறு எங்கும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தும் திட்டமில்லை. வருங்காலத்தில் நவீன வசதிகளுடன் மிகப்பெரிய மைதானம் ஒன்று கட்டப்படும் என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 24, ஜனவரி 2026 5:43:32 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்; விமானங்கள் ரத்து
சனி 24, ஜனவரி 2026 12:04:20 PM (IST)

கர்நாடகத்தில் பைக் டாக்ஸி மீதான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 23, ஜனவரி 2026 5:07:26 PM (IST)

கேரளாவுக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்: பினராயி விஜயன் நன்றி!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:39:21 PM (IST)

திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான வழக்கு : மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:53:57 AM (IST)

தூக்க மாத்திரைகள் கொடுத்து கணவனை கொன்ற மனைவி: தலைமறைவான கள்ளக்காதலனுக்கு வலை!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:51:14 AM (IST)

