» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கேஜ்ரிவால், சிசோடியா விடுவிப்பு : நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:39:03 PM (IST)

மதுபான கொள்கை வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை விடுவித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
டெல்லியில் முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் போது அரசு அறிமுகம் செய்த புதிய மதுபான கொள்கையில் (2022) முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். இந்தச் சூழலில் சிபிஐ விசாரித்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் கேஜ்ரிவால் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் என்.ஹரிஹரன் தனது வாதத்தை எடுத்து வைத்தார். வழக்கு தொடர்பான வாதங்கள் முடிந்த நிலையில் டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
இதில் கேஜ்ரிவால், சிசோடியா மற்றும் இதில் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட 21 பேரை விடுவித்தது. இந்த தீர்ப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை வெற்றியைப் பரிசளிப்பார்கள்: கெஜ்ரிவால் நம்பிக்கை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:45:23 AM (IST)

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்: இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 12.8% சரிவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 10:55:14 AM (IST)

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு – மத்திய அரசு கடும் கண்டனம்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:34:00 AM (IST)

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: அமைச்சரவை ஒப்புதல்
சனி 18, ஏப்ரல் 2026 5:27:06 PM (IST)

இண்டியா கூட்டணி எதிர்ப்பு எதிரொலி: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா தோல்வி
சனி 18, ஏப்ரல் 2026 10:45:21 AM (IST)

தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:36:14 PM (IST)

