» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 18 பேர் உடல் கருகி பலி: முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல்!
சனி 28, பிப்ரவரி 2026 5:00:11 PM (IST)

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலை ஒன்றில், இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த 18 பேர் உடல் கருகியும், உடல் சிதறியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வெட்லபாலெம் பட்டாசு ஆலை விபத்து செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். இந்த விபத்தில் பல உயிர்கள் பறிபோயிருப்பது வருத்தமளிக்கிறது.
இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளதோடு, நிவாரணப் பணிகளையும் நேரடியாகக் கண்காணித்து வருகிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை வெற்றியைப் பரிசளிப்பார்கள்: கெஜ்ரிவால் நம்பிக்கை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:45:23 AM (IST)

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்: இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 12.8% சரிவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 10:55:14 AM (IST)

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு – மத்திய அரசு கடும் கண்டனம்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:34:00 AM (IST)

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: அமைச்சரவை ஒப்புதல்
சனி 18, ஏப்ரல் 2026 5:27:06 PM (IST)

இண்டியா கூட்டணி எதிர்ப்பு எதிரொலி: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா தோல்வி
சனி 18, ஏப்ரல் 2026 10:45:21 AM (IST)

தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:36:14 PM (IST)

