» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதி
புதன் 11, மார்ச் 2026 11:53:28 AM (IST)
சர்வதேச அரசியல் சூழல்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் வீட்டு உபயோக எரிவாயு (LPG) சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, உலக நாடுகளுக்கான முக்கிய சரக்குக் கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் உலக அளவில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அண்மையில் எரிவாயு விலை உயர்ந்ததுடன், சில இடங்களில் வர்த்தக ரீதியிலான சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல்கள் வெளியானது.இந்தச் சூழலில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: "இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை. நாம் பல்வேறு நாடுகளிலிருந்தும், மாற்று வழிகளிலும் எரிபொருளைத் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறோம். எனவே, விநியோகச் சங்கிலியில் எவ்விதப் பாதிப்பும் இல்லை."
இந்தியாவில் சி.என்.ஜி (CNG) மற்றும் பி.என்.ஜி (PNG) ஆகிய வீட்டு உபயோக எரிவாயு விநியோகம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. போர்ச் சூழல் நிலவினாலும், தொழிற்சாலைகளுக்கான எரிபொருள் விநியோகம் 70% முதல் 80% வரை தடையின்றித் தொடரும்.
சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றத்தால் எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்படும் என எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சரின் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: போலீசார் தீவிர விசாரணை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:20:52 PM (IST)

பாரத மாதாவுக்கு உங்கள் திறமை தேவை: அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 10:19:11 AM (IST)

கல்பாக்கம் அணு உலை சாதனை - இந்தியாவிற்குப் பெருமை: பிரதமர் மோடி புகழாரம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:17:30 AM (IST)

டி.வி. பார்ப்பதில் தகராறு: மனைவி, மகள், பேத்திக்கு கத்திக்குத்து: மும்பை முதியவரின் வெறிச்செயல்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:11:48 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பெட்டிகளில் பயணிக்க அனுமதி: யு.டி.ஐ.டி அட்டை இருந்தால் போதும்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 10:20:33 AM (IST)

அக்சய் குமார் மகளுக்கு ஆன்லைன் கேமில் பாலியல் தொல்லை: மர்ம ஆசாமி கைது!
சனி 25, ஏப்ரல் 2026 5:35:24 PM (IST)


