» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
புனேவில் மக்கள் போராட்டம்: சிறுமி கொலை வழக்கில் விரைவு நீதிமன்ற விசாரணைக்கு முதல்வர் உத்தரவு!
ஞாயிறு 3, மே 2026 4:58:27 PM (IST)
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள நஸ்ராப்பூர் கிராமத்தில், 3 வயது சிறுமி ஒருவரை 65 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் சிறுமியைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 65 வயது முதியவர் ஒருவர் அச்சிறுமியை அழைத்துச் சென்றது உறுதியானது.
"பசுக் கன்றைக் காண்பிக்கிறேன்" என்று ஆசை வார்த்தை கூறி சிறுமியை மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்ற அந்த நபர், அங்கு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சிறுமியின் முகத்தை கல்லால் தாக்கி சிதைத்துக் கொலை செய்துள்ளார்.
அடையாளத்தை மறைக்கச் சிறுமியின் உடலைத் தொழுவத்தில் இருந்த சாணக் குழியில் புதைத்துள்ளார். அன்று இரவு 7:30 மணியளவில் தலை சிதைந்த நிலையில் சிறுமியின் சடலத்தைப் போலீஸார் மீட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள 65 வயது நபர் மீது ஏற்கனவே 1998 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் சிறுமிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த நஸ்ராப்பூர் கிராம மக்கள், குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்கக் கோரி புனே-சதாரா நெடுஞ்சாலையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டித்துள்ள முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இதற்காகச் சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என்றும், குற்றவாளிக்கு மரண தண்டனை பெற்றுத் தர அரசு கடும் வாதங்களை முன்வைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயற்சி : உத்தரப்பிரதேசம், பீகாரில் 10 பேர் கைது
திங்கள் 22, ஜூன் 2026 11:28:42 AM (IST)

தமிழக முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!
திங்கள் 22, ஜூன் 2026 10:54:12 AM (IST)

உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் 16 வகை கூட்டு மருந்துகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:19:02 AM (IST)

மராட்டியத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் கோவில் மேற்கூரை இடிந்து 7 பக்தர்கள் பலி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:11:51 AM (IST)

செல்போன் பறித்துவிட்டு ஸ்கூட்டரில் தப்பிய வாலிபர் திடீர் மரணம்: கூட்டாளி கைது!
சனி 20, ஜூன் 2026 12:16:00 PM (IST)

நீட் தேர்வில் உச்சக்கட்ட தொழில்நுட்பக் கோளாறு : நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்!
சனி 20, ஜூன் 2026 12:05:32 PM (IST)


