» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழக்கிறார் மம்தா : பெரும்பான்மையை விட பாஜக முன்னிலை!
திங்கள் 4, மே 2026 12:03:55 PM (IST)
மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 294 இடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மறுதேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு தொகுதி தவிர்த்து 293 இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வரும் நிலையில் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக 159 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 119 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 4 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.
பபானிபூர் தொகுதியில் மம்தாவை பின்னுக்கு தள்ளி பாஜகவின் முதல்வர் முகம் சுவேந்து அதிகாரி முன்னிலையில் உள்ளார். நந்திகிராமிலும் சுவேந்து அதிகாரி முன்னிலையில் உள்ளார்.
மேற்கு வங்கத்தில் பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவைப்படும் நிலையில் தற்போதைய நிலவரடி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதன்மூலம் மம்தா பானர்ஜி தலைமையிலான 14 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது.
அண்மையில் அங்கு நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 89 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயற்சி : உத்தரப்பிரதேசம், பீகாரில் 10 பேர் கைது
திங்கள் 22, ஜூன் 2026 11:28:42 AM (IST)

தமிழக முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!
திங்கள் 22, ஜூன் 2026 10:54:12 AM (IST)

உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் 16 வகை கூட்டு மருந்துகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:19:02 AM (IST)

மராட்டியத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் கோவில் மேற்கூரை இடிந்து 7 பக்தர்கள் பலி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:11:51 AM (IST)

செல்போன் பறித்துவிட்டு ஸ்கூட்டரில் தப்பிய வாலிபர் திடீர் மரணம்: கூட்டாளி கைது!
சனி 20, ஜூன் 2026 12:16:00 PM (IST)

நீட் தேர்வில் உச்சக்கட்ட தொழில்நுட்பக் கோளாறு : நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்!
சனி 20, ஜூன் 2026 12:05:32 PM (IST)


