» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்பு : பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 9, மே 2026 11:38:29 AM (IST)

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். விழாவில் பிரதமர் மோடி நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்னா உள்ளிட்ட என்டிஏ ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, பிரதமர் மோடி மேடையில் இருந்த 98 வயதான மூத்த பாஜக தொண்டர் மகான்லால் சர்க்காரிடம் ஆசி பெற்றார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. சுவேந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பவானிப்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பவானிப்பூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை 15,115 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:05:48 PM (IST)

லக்னோ அனிமேஷன் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலி!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:44:03 AM (IST)

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயிலுக்கு ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வ ஒப்புதல்!
திங்கள் 22, ஜூன் 2026 5:14:00 PM (IST)

நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயற்சி : உத்தரப்பிரதேசம், பீகாரில் 10 பேர் கைது
திங்கள் 22, ஜூன் 2026 11:28:42 AM (IST)

தமிழக முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!
திங்கள் 22, ஜூன் 2026 10:54:12 AM (IST)

உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் 16 வகை கூட்டு மருந்துகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:19:02 AM (IST)


